tamil poems by me!




-------------------------------------------------------------------------------------------------


என் இதயத்தை தவிக்க வைப்பது
பல இதயங்களுக்கு பொழுது போக்கு
பல இதயங்களின் பொழுதுபோக்கிற்காகவே
என் இதயமானது துடித்துக்கொண்டே 
இருக்கின்றது....இருக்கும்...
அது தானாகவே செயலிழக்கும் வரை



-----------------------------------------------------------


மனம் கொண்ட காதலிக்கு,
பணம் ஒன்று வேண்டாம்,
கனம் ஒன்று நீ பார்த்தால்,
ஜனனம் வரை உன்னுடன் இருப்பேன்!
valentine special by me!
-விநோதமான விநோதினி-


----------------------------------------------------------------------



நிலவுக்கு வெளிச்சமாக
சூரியனுக்கு வெப்பமாக
வானத்துக்கு மின்னலாக
கவிதைக்கு வார்த்தைகளாக
கடலுக்கு நீலமாக
இதயத்துக்கு துடிப்பாக
எனக்கு எப்போதும் நீ,

----------------------------------------------------------
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்துது...
என்மேல் நீ
வைத்திருந்த காதலின் 
அளவு என்னவென்று...


------------------------------------------------------------------------------






my 2nd prize poem in competition