Sunday, April 29, 2012

வெற்றி


வெற்றி


உன்னை ஈன்றெடுத்த தருணம்
தாய் அறிந்தாள் எது வெற்றியென,
நீ நடைவண்டியில் நடந்தபோது,
தந்தை அறிந்தார் எது வெற்றியென

உனக்குக் கற்றுகொடுத்த பிறகு,
ஆசான் அறிந்தார் எது வெற்றியென,
தோள் கொடுத்த போது,
தோழன் அறிந்தான் எது வெற்றியென,

கல்கறைந்தபோது எறும்பறிந்தது வெற்றி,
சிலை உருவெடுத்ததும் சிற்பி அறிந்தான் வெற்றி,
நெல்கதிர் கண்டதும் உலவன் அறிந்தான் வெற்றி,
நன்நடத்தையுடன் வாழ்ந்தால் நீ அறிவாயடா வெற்றி!

a poem i wrote for tamil week competition at IPGKTI.
(by vinoodinisi)

No comments:

Post a Comment