Monday, October 5, 2015

அவள் என்னை விட மேலானவள்?

நீ விட்டுச் செல்லும் வரை எனக்குத் தெரியவில்லை. உன்னை விட அன்பானவர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்று.

என்னுடன் கைக்கோர்த்து நடக்கும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை மட்டுமே மணந்து கொள்வேன் என்று சொல்லும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன் வீட்டினரிடம் என்னை அறிமுகம் படுத்தும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை மட்டுமே உலகம் என நினைத்து நான் வாழ்கிறேன் என கூறும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

உன்னை நான் அணு அணுவாய் காதலிக்கும் போது தெரியவில்லையா அவள் என்னை விட மேலானவள் என்று?

என் மன்னவனாய் உன்னை நினைத்து வாழ்ந்ததற்கு நீ கொடுத்தப் பரிசு இதுதானா?  என் தோழியுடன் தொடர்ப்பு? உன்னிடம் கோபித்துக்கொள்வதா? அல்லது அவளிடம் சென்று உன்னைத் தரும் படி கேட்பதா?

வேண்டாம். எதுவும் வேண்டாம். உன்னை நான் காதலித்தேன். உன் மகிழ்ச்சியை நான் தடை செய்ய மாட்டேன். எங்கு இருந்தாலும் நலமாக இரு, 
ஆனால், இனி நீ எனக்கு வேண்டாம். 

மறுமுறை உன்னைப் பார்த்தால், நான் உனக்கு நன்றி கூறுவேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்ததற்கு,,, நீ இன்றி,

 

No comments:

Post a Comment